Sunday, 21 May 2017

ஜூன் 8ல் ரூபாய் நோட்டு வாபஸ் குறித்து உர்ஜித் பட்டேல் விளக்கம்

புதுடில்லி: ஜூன் 8ம் தேதி, பார்லி., குழுவிடம் ரூபாய் நோட்டு வாபஸ் குறித்து, உர்ஜித் பட்டேல் விளக்கமளிக்க உள்ளார்.

ரூபாய் நோட்டு வாபஸ் குறித்து ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல், பார்லி., குழுவினரிடம் ஜூன் 8ம் தேதி, இரண்டாவது முறையாக விளக்கமளிக்க உள்ளார். முன்னதாக மே 25ல் ரூபாய் நோட்டு வாபஸ் குறித்து விளக்கமளிப்பதாக இருந்த நிலையில் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த பார்லி., குழுவில் முக்கிய உறுப்பினராக முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் மன்மோகன் சிங் உள்ளார்.

கடந்த ஜனவரி மாதம், முன்னாள் மத்திய அமைச்சரும் காங்., மூத்த தலைவருமான வீரப்ப மொய்லி தலைமையில் நடந்த விளக்கக் கூட்டத்தில் உர்ஜித் பட்டேல் விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

தமிழக பள்ளிக் கல்வித்துறை மாற்றங்களை முன்னெடுப்போம்

தமிழக பள்ளிக் கல்வித்துறை பரபரப்பாக இயங்கத் தொடங்கியிருப்பதையும் அளப்பரிய மாற்றங்களை முன்வைத்து புதுமெருகு ஏற்றிக் கொண்டு வருவதையும் அனைத்த...