பலிபீடத்தின் கருணை !! ( இடைநிலை ஆசிரியர்களே சிந்தீப்பீர் )
நண்பர்களே... இடைநிலை ஆசிரியர்களுக்கு PG TRB இல் 10% இடஒதுக்கீடு என்ற நேற்றைய அறிவிப்பால் உணர்ச்சிவசப்பட்டு அகமகிழ்ந்திட வேண்டாம்.....
யாருமே கேட்காத போது ஏன் இந்தஇடஒதுக்கீடு?
கடந்த ஆறாவது ஊதியக்குழுவில் மிகவும் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய இழப்பை சரிசெய்ய பத்தாண்டுகளாக அனைத்து ஆசிரியர் சங்கங்களும் போராடி வரும் நிலையில் அடுத்த ஊதியக்குழுவில்
இந்த வேறுபாடு களையப்படும் என்ற குறைந்தபட்சநம்பிக்கையோடு இடைநிலை ஆசிரியர்கள் காத்துக் கொண்டிருக்கையில் அரசின் தன்னிச்சையான இந்த அறிவிப்பு வரப்போகும் பேராபத்துக்கு கட்டியம் கூறுகிறது. இடைநிலை ஆசிரியர் ஊதிய விகிதத்தில் இருக்கும் ஆசிரியர்கள் என்று குறிப்பிட்டு கூறுவதால் ஊதிய விகிதத்தை மாற்றியமைத்து நேர்செய்யும் எண்ணத்தில் அரசு இல்லை என்பது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. அடுத்த ஊதியக்குழு பரிந்துரை எப்படி அமையும் என்பதற்கு இது சான்றளிக்கிறது. அடுக்கிய மூட்டையில் அடிமூட்டையாய் வீழ்ந்து கிடக்கும் இடைநிலை ஆசிரியர்களின் வேதனையை தீர்க்காமல் PG TRB இடஒதுக்கீடு என்று ஆசை காட்டி ஏமாற்ற அரசு துணிந்துள்ளது. அதுவும் UG அல்ல; PG மட்டும். இடைநிலை ஆசிரியர் நிலையில் உள்ள பிற ஆசிரியர் என்று சொன்னாலும் ஓவிய, தையல், உடற்கல்வி ஆசிரியர்கள் போன்ற சிறப்பாசிரியர்களுக்கு PG இல் என்ன வாய்ப்புள்ளது? ஓரிரு இடைநிலை ஆசிரியர்களுக்கு சில வாய்ப்புகளை தந்து விட்டு ஊதிய கோரிக்கையை கைகழுவப் பார்க்கிறது. இதில் மயங்கி கிடந்தால் வாழ்நாள் முழுவதும் இடைநிலை ஆசிரியர்கள் மீண்டெழவே முடியாது. ஒன்றுபட்ட போராட்டமே இழந்த ஊதியத்தை மீட்டெடுக்கும்...
இல்லாத அரசின் கருணையை எதிர்பார்த்துக் கையேந்தி நின்று கொண்டிருக்கப் போகிறோமா? தட்டிப் பறித்த உரிமைகளை எட்டிப் பிடிக்க கரமுயர்த்தி முன்னேறப் போகிறோமா?
ஊழியர்களின் நலன்மீது
அரசின் அக்கறை எந்தளவு இருக்கிறது என்பதை சமீபத்திய போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் நமக்கு தெளிவுபடுத்தியுள்ளது. நம்மிடம் பிடித்த CPS உள்ளிட்ட தொகையைக் கூட கொடுக்க முன்வராத அரசாங்கம் நமது ஊதிய முரண்பாட்டை நமக்கேற்றவாறு வழங்க முன்வருமா?
இடைநிலை ஆசிரியர்கள் வாழ்வாதாரம் காக்க ஆசிரியர் சமூகம் ஒன்றுபட்டு களமிறங்க வேண்டியது அவசியம். அவசரமும்கூட... ஆசிரிய சங்கங்களே விரைவாக அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுங்கள்....
(இந்த ஊதியக்குழு என்னஅபாயங்களை யாருக்கு வழங்க உள்ளதோ? )
இன்று நாம் போராட வீதிக்கு வராவிட்டால் வருங்காலம் நம்மை இழுத்து வந்து தெருவில் நிறுத்தும்...
- விஜி, கிருஷ்ணகிரி.

No comments:
Post a Comment