Tuesday, 16 May 2017

சிம்லா, 'இமாச்சல பிரதேசத்தில், வனப்பகுதியை பாதுகாக்க, புதிதாக நடப்பட்ட செடிகளை 
பாதுகாக்காத, ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்' என, 

மாநில வனத்துறை உத்தரவிட்டுள்ளது.இமாச்சல பிரதேசத்தில், முதல்வர் வீர்பத்ர சிங் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. 
மாநிலத்தின் வனப்பகுதியை பாதுகாக்கும் வகையில், புதிய திட்டத்தை மாநில வனத்துறை 
அறிவித்துள்ளது.இதுகுறித்து வனத்துறை சார்பில், மாநிலத்தில் உள்ள அனைத்து வனத்துறை 
அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள உத்தரவு:வனப்பகுதியில் நடப்படும் செடிகளை, 
ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நன்கு பராமரிக்க வேண்டும். 
செடிகள் வளர்ந்து மரமாகி, பூ, காய், கனி என்று செழிப்புடன் வளர்ந்தால், அவற்றை பராமரிக்கும் ஊழியர் அல்லது அதிகாரிக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் வழங்கப்படும். மாறாக, செடிகள் அழிந்துவிட்டால், குறிப்பிட்ட ஊழியர் அல்லது அதிகாரியின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தமிழக பள்ளிக் கல்வித்துறை மாற்றங்களை முன்னெடுப்போம்

தமிழக பள்ளிக் கல்வித்துறை பரபரப்பாக இயங்கத் தொடங்கியிருப்பதையும் அளப்பரிய மாற்றங்களை முன்வைத்து புதுமெருகு ஏற்றிக் கொண்டு வருவதையும் அனைத்த...