யோசனை.....!
அரசு போக்குவரத்து பணிமனை
குத்தகைக்கு விட்டால் வருவாய்
அரசு போக்குவரத்து கழகங்கள், பணிமனைகளை, தனியாருக்கு குத்தகைக்கு விட்டால், பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்ற யோசனை, அரசுக்கு கூறப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், அரசு போக்குவரத்து கழகங்கள், நஷ்டத்தில் இயங்குவதால், ஊழியர்களுக்கு குறித்த காலத்தில் சம்பளம் வழங்க முடிவதில்லை. இதனால் தற்போது, அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு போக்குவரத்து கழகங்கள், லாபத்தில் செயல்பட, அத்துறையை சேர்ந்த நிபுணர்கள் கூறியதாவது:
போக்குவரத்து கழகங்கள், நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க, மூன்று வழிகளை பின்பற்றலாம்.
* மஹாராஷ்டிரா மாநிலத்தில், ஒவ்வொரு நகரத்திலும், அரசு போக்குவரத்து கழகங்கள் உள்ளன. அவை, தங்கள் போக்குவரத்து
போக்குவரத்து கழகங்கள், நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க, மூன்று வழிகளை பின்பற்றலாம்.
* மஹாராஷ்டிரா மாநிலத்தில், ஒவ்வொரு நகரத்திலும், அரசு போக்குவரத்து கழகங்கள் உள்ளன. அவை, தங்கள் போக்குவரத்து
பணிமனைகளை, தனியார் நிறுவனங்களுக்கு, குத்தகைக்கு விடுகின்றன. குத்தகை எடுப்போர், போக்குவரத்து கழகத்திடம் கட்டணத்தை செலுத்தி, டிரைவர், நடத்துனர்களை நியமித்து, பஸ்களை இயக்குகின்றனர்.ஊழியர்களுக்கான ஊதியத்தையும், குத்தகை நிறுவனங்களே வழங்குகின்றன. இதன்மூலம், அம்மாநிலத்தில் போக்குவரத்து கழகங்கள், லாபத்தில் செயல்படுகின்றன
* அரசு, பஸ் மற்றும் டிரைவர்களை வாடகைக்கு எடுக்கலாம். அதன்படி, 1 கி.மீ., துாரத்துக்கு, குறிப்பிட்ட கட்டணத்தை, பஸ் நிறுவனங்களுக்கு வழங்கினால் போதும்; அவை, பஸ்களை இயக்கும். டிரைவர்களுக்கு, தினசரி சம்பளம் வழங்கலாம்; இதனால், அதிக சுமை ஏற்படாது
* பெட்ரோல் பங்க்கை, தனியார் நடத்துகின்றன. சில இடங்களில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே, சொந்தமாக பெட்ரோல் பங்க் நடத்துகின்றன. அந்தபங்க்கில் பெட்ரோல் நிரப்புவது, கட்டட பராமரிப்பு என அனைத்தும், எண்ணெய் நிறுவனங்களின் பொறுப்பு. பெட்ரோல்விற்பனை செய்வது மட்டும், ஒப்பந்த ஊழியர்கள். அதே போல், போக்குவரத்து

Advertisement
கழகங்களும், பணிமனை, பஸ்களை, தனியார் மூலம் இயக்கலாம்இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னையில் தனியார் பஸ்
சென்னையில், அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. தனியார், பஸ் சேவை கிடையாது. போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால், தற்போது, அரசு பஸ் சேவை முடங்கியுள்ளது. இதனால், பிற மாவட்டங்களில் இருந்து வந்துள்ள, 600 தனியார் பஸ்கள், சென்னையில் இயக்கப்படுகின்றன.
குறிப்பாக, திருச்சியில் இருந்து, 40 பஸ்கள் வந்துள்ளன. அதில், 20 பஸ்கள், பிராட்வே - வண்டலுார் வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.- நமது நிருபர் -
No comments:
Post a Comment